மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் இன்று அவரது கட்சி தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் சமூக வலைத்தளங்களில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் வருமென்று பார்த்தால் மாறாக டிவிட்டரில் #HBDFatherofcorruption என்ற ஹேஸ்டேக்கில் அவர் செய்த ஊழல்கள் குறித்து இணையவாசிகள் அவரை கிண்டலடித்துள்ளனர். இது திமுகவினருக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது.
இன்று காலை முதலே ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இந்த ஹேஸ்டேக் இந்திய அளவிலும், தமிழ்நாடு அளவிலும் ட்ரெண்டானது. அதிலும் குறிப்பாக தமிழ்நாடு அளவில் முதல் இடத்தை பிடித்தது. இதனை சமாளிக்கும் விதமாக திமுக #HBDKalaignar96 என்ற ஹேஸ்டேக்கை வெளியிட்டது. ஆனால் அதை எல்லாம் விட #HBDFatherofcorruption மிக வேகமாக ட்ரெண்டாகியுள்ளது.
அதன்கீழ் அவர் செய்த ஊழல்கள், போலி பகுத்தறிவு, இந்தி எதிர்ப்பு, தமிழ்ப்பற்று குறித்த பல்வேறு மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன. என்னதான் திமுக தாங்கள் நல்லவர்கள் என்று நாடகம் ஆடினாலும் மக்கள் அவர்கள் செய்த ஊழல்கள் எதையும் மறக்கவில்லை என்ற உண்மை மீண்டும் நிரூபணமாகியுள்ளது.