சைதாப்பேட்டையில் கருணாநிதி நினைவு வளைவு, திமுக சின்னம் மறைப்பு

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கருணாநிதி நினைவு வளைவு மறைக்கப்பட்டது. சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் பொன்  விழா வளைவு உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகும், நினைவு வளையத்தில் உள்ள பெயர் மற்றும் திமுக சின்னம் ஆகியவை மறைக்கப்படாமல் இருந்தது. இது தொடர்பாக சைதாப்பேட்டையை சேர்ந்த கதிர்வேலு என்பவர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து,  கருணாநிதியின் பெயர் மற்றும் சின்னம் மறைக்கப்பட்டது. 

Exit mobile version