இலங்கையில் வரும் ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி, தேர்தல் பிரசாரங்கள் நடந்து வருகின்றன. அம்பாறையில் சமீபத்தில் நடந்த பிரசாரத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் துணைத் தலைவரும், அகில இலங்கை திராவுத மகா சபை கட்சி தலைவருமான கருணா அம்மான் , விடுதலைப் புலிகள் அமைப்பில் தாம் இருந்த போது, ஆனையிறவில் 2,000 முதல் 3,000 இலங்கை ராணுவ வீரர்களை கொன்றதாக பேசியுள்ளார். கிளிநொச்சியிலும் அதிகம் பேரை கொன்றதாகவும் தானாக வந்து வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் கொன்றதை விட அதிகம் பேரை தான் கொன்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது கடும் சர்ச்சையாகி இருக்கிறது. ‘கருணா அம்மான் கொரோனா வைரசை விட ஆபத்தானவர்’ என அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. கருணா பேசியது குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டது. இது குறித்து விசாரித்து அறிக்கை தர காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கருணாவின் அகில இலங்கை திராவுத மகா சபை கட்சி, முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் எஸ்எல்பிபி கட்சியின் தோழமை கட்சியாக கருதப்பட்டு வந்தது. தற்போது, 2000 ராணுவ வீரர்களை கொன்றதாக அவர் பேசியதால், அவரது கட்சி தங்களின் தோழமை கட்சியல்ல என எஸ்எல்பிபி அறிவித்துள்ளது. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் கருணா.. இவர் மீது இருந்த நம்பிக்கை காரணமாக இவருக்கு கிழக்கு மாகாண தலைமை பதவியை கொடுத்தார் பிரபாகரன்.. ஆனால் தலைமைக்கு துரோகம் செய்யும் விதத்தில் நடந்துகொள்வதை கண்டறிந்த பிரபாகரன் அவரை விரட்டியடித்தார்.. ஆனால் கருணாவோ தனக்கென்று ஒரு படையை உருவாக்கிக்கொண்டு, விடுதலைப்புலிகளுக்கு எதிராக போரிட்டார்.. பின்னர் தமிழர்களின் எதிரியான ராஜபக்சேவிடம் சென்று சேர்ந்துகொண்டு தமிழர்களையும், விடுதலைப்புலிகள் அமைப்பையும் காட்டிக்கொடுத்தார்.. காட்டிக்கொடுத்ததற்கு கூலியாக, கருணாவுக்கு துணை அமைச்சர் பதவியை கொடுத்தார் ராஜபக்சே… 2009ல் நடந்த இறுதிகட்ட போரில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு, பிரபாகரன் கொல்லப்பட்டதற்கு முக்கிய காரணம் கருணாவின் மற்றும் கருணாநிதியின் துரோகம் என்பது வரலாற்றில் இருந்து என்றும் மாறாக வடுவாகிப்போனது குறிப்பிடத்தக்கது. தவறு செய்தவன் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற நியதிக்கேற்ப, திமுகவுக்கு சட்டமன்ற தேர்தல்களில் தொடர்ந்து படுதோல்வியை பரிசளித்து தமிழர்கள் தக்க பாடம் புகட்டி வருகிறார்கள்.. தவளை தன் வாயாலேயே கெடும் என்பதை போல, தற்போது மற்றொரு தமிழின துரோகி கருணா, வலுவாக சிக்கிக்கொண்டுள்ளார்.