ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான 22 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கி, அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
பீட்டர் முகர்ஜி மற்றும் அவரது மனைவி இந்திராணி ஆகியோருக்கு சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு விதிமுறைகளை மீறி 305 கோடி ரூபாய் அன்னிய முதலீடு செய்ய வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மூலம் அனுமதி வழங்கியதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த மோசடியை மறைக்க அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தனது நிறுவனங்கள் மூலம் உதவியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் த விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கார்த்திக் சிதம்பரத்திற்கு சொந்தமான 54 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை ஏற்கனவே முடக்கியிருந்தது. இதன் தொடர்ச்சியாக இன்று 22 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.