தீபாவளி ரீலிசில் “பிகில்”க்கு போட்டியாக களமிறங்கும் கார்த்தியின் “கைதி”

தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தீபாவளிக்கு என்னென்ன படங்கள் ரீலிசாகும் என தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கி காத்துள்ளனர்.இதில் 2019ம் ஆண்டின் தீபாவளிக்கு நடிகர் விஜய்யின் “பிகில்” ரீலிசாகும் என அந்த படம் தொடங்கும் போதே படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் நடிகர் விஜய் சேதுபதியின் “சங்கத்தமிழன்” திரைப்படமும் தீபாவளி வெளியீடாக இருக்கும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது யாரும் எதிர்பாராத வகையில் நடிகர் கார்த்தியின் “கைதி” திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகுமென அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இவர்தான் விஜய்யின் அடுத்த பட இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளிக்கு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவதால் தமிழ் சினிமா ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டத்துக்கு தயாராகியுள்ளனர்.

Exit mobile version