திருவண்ணாமலையில் இன்று கார்த்திகை மகா தீபத் திருவிழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை மகா தீபத் திருவிழா இன்று நடைபெறுகிறது. 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தீபத் திருவிழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரர், உண்ணாமலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து கோயில் மூலவர் சந்நிதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதே நேரத்தில் கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் ஆண்டுக்கு ஒருமுறை 3 நிமிடங்கள் காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

தீபத் திருவிழாவையொட்டி பாதுகாப்புப் பணியில் சுமார் 8 ஆயிரத்து 500 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய இடங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அண்ணாமலையார் கோவில் தீபத்தை காண பல லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.சென்னை கோயம்பேடு மற்றும் தாம்பரம் பேருந்து நிலையங்களில் இருந்து ஆயிரத்து 750 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தீபத் திருவிழாவை நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் நேரலையாக கண்டு களிக்கலாம்.

Exit mobile version