திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கட்டண தரிசனம் டிக்கெட் இணையதளம் மூலம் விற்பனை துவங்கி உள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வரும் 10ம் தேதி விமர்சையாக நடைபெற உள்ளது. காலை 4 மணிக்கு கோயில் வளாகத்தில் பரணி தீபமும் மற்றும் மாலை 6 மணியளவில் மகா தீபமும் நடைபெற உள்ளது.
பக்தர்களின் வசதிக்காக பரணி தீப தரிசனத்திற்கு ரூபாய் 500 கட்டணத்தில் 500 நபர்களுக்கும் மகாதீப தரிசனத்தை 600 ரூபாய் கட்டணத்தில் 100 பக்தர்களுக்கும் 500 ரூபாய் கட்டணத்தில் ஆயிரம் பக்தர்களுக்கும் என ஆயிரத்து 600 டிக்கெட்டுகள் இணையதளம் மூலம் விற்பனை வழங்கப்படுகிறது.
கட்டண டிக்கெட்டுகளை www.arunachaleswarartemple.tnhrce.in என்ற இணையதளத்தின் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கட்டணச் சீட்டு பெற ஆதார் அட்டை, கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அவசியம் என்றும் ஒரு ஆதார் அட்டைக்கு ஒரு கட்டண சீட்டு மட்டுமே பதிவு செய்ய முடியும்.
கட்டண சீட்டு பதிவிற்கு பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் வழியாக கட்டண சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவிறக்கம் செய்யப்பட்டு பரணி தீப தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் 10ம் தேதி அன்று அதிகாலை 2 மணி முதல் 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மகா தீப தரிசனத்தைக் வருகை தரும் பக்தர்கள் 10ம் தேதி மாலை 2 முப்பது மணி முதல் மூன்று 30 மணி வரை மட்டுமே கோயில் வளாகத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட இரண்டு தீப நிகழ்வுகளை காண வரும் பக்தர்கள் அசல் கட்டணச் சீட்டு மற்றும் அசல் ஆதார் கார்டு ஆகியவற்றுடன் குறிப்பிட்ட நேரத்திற்குள் கோயில் வடக்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.