கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 3ஆம் நாள் உற்சவம்

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, அண்ணாமலையார் கோயிலில் மூன்றாம் நாள் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.

திருவண்ணாமலையில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, மூன்றாம் நாள் உற்சவம் நடைபெற்றது. பஞ்சமூர்த்திகளான விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், முருகன் வெள்ளி மயில் வாகனத்திலும், அண்ணாமலையார் சிம்ம வாகனத்திலும், உண்ணாமலை அம்மன் அன்ன பட்சி வாகனத்திலும் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர். இதைத்தொடர்ந்து, வேதமந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகர முழக்கத்துடன் அண்ணாமலையாரை வழிபட்டனர். இதையடுத்து மாட வீதிகளில் பஞ்சமூர்த்திகளுடன் உலா வந்த அண்ணாமலையார் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Exit mobile version