கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு இரண்டாம் நாள் உற்சவம்

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, அண்ணாமலையார் கோயிலில் இரண்டாம் நாள் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.

திருவண்ணாமலையில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, இரண்டாம் நாள் உற்சவம் நடைபெற்றது. உற்சவத்தில் உண்ணாமலை அம்மன் உடனாகிய அண்ணாமலையார் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, 16 கால் மண்டபத்தில் கொடை அலங்காரம் செய்யப்பட்டு, உண்ணாமலை அம்மன் உடனாகிய அண்ணாமலையார் இந்திர வாகனங்களில் எழுந்தருளினர். சிறப்பு பூஜைகள் மற்றும் வானவேடிக்கையுடன் நான்கு மாடவீதியை சுற்றி வந்து அண்ணாமலையார் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாரை வழிபட்டனர்.

Exit mobile version