ஈழத் தமிழ் அறிஞர் பேராசிரியர் கா.சிவத்தம்பியின் பிறந்தநாள் இன்று

தமிழக அரசால் திரு.வி.க விருது அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்ட ஈழத் தமிழ் அறிஞர் பேராசிரியர் கா.சிவத்தம்பியின் பிறந்தநாள் இன்று

1932-ம் ஆண்டு யாழ்பாணத்தில் பிறந்த சிவத்தம்பி, கொழும்பு சாகிரா கல்லூரியில் ஆசிரியராகவும், இலங்கை நாடாளுமன்ற சமகால மொழி பெயர்ப்பாளராகவும் பணி புரிந்தவர்.

தமிழ், சமயம், சமூகவியல், மானிடவியல், அரசியல், வரலாறு, கவின் கலைகள் என பல துறைகளில் இவரது பங்களிப்பு சிறப்பு மிக்கது.

மார்க்சியச் சிந்தனை போக்குடைய சிவத்தம்பி, யாழ்ப்பாணச் சமுதாயத்தின் பல்வேறு குறைபாடுகளை கடுமையாக விமர்சித்தார்.

ஆய்வுக்கட்டுரைகள், நூல்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்களை ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் உருவாக்கிய சிவத்தம்பி, மேடை நாடகங்கள் மற்றும் வானொலி நாடகங்களிலும் நடித்து புகழ்பெற்றவர்.

கடந்த 2011-ம் ஆண்டு சிவத்தம்பி தன்னுடைய 79வது வயதில் மண்ணுலம் விட்டு விண்ணுலம் சென்றார்.

தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தஞ்சை தமிழ் பல்கலைகழகம், சென்னை பல்கலைக் கழகம் ஆகியவற்றில் இவருடைய ஆய்வு பங்களிப்பு மிக முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது

Exit mobile version