நீதிமன்றத்தில் செய்த டெபாசிட் தொகையை திருப்பிக்கேட்ட கார்த்தி சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் குட்டுவைத்து அவரது மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
ஏர்சல்-மேக்சிஸ், ஐ.என்.எக்ஸ் முறைகேடு ஆகிய வழக்குகளில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றவருமான கார்த்தி சிதம்பரத்திற்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதனிடையே தான் வெளிநாடு செல்வதற்காக நீதிமன்றத்தில் டெபாசிட் செய்த 10 கோடி ரூபாயை திருப்பி தருமாறு உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். இதுகுறித்து விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, வெளிநாடு செல்வதை தவிர்த்துவிட்டு முதலில் வெற்றிபெற்ற மக்களவை தொகுதியின் மீது கவனம் செலுத்துமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு அறிவுறுத்தியது.