கார்த்தி சிதம்பரத்தின் 22 கோடி ரூபாய் சொத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது, ஊழல் பனிமலையின் சிறு நுனிதான் என பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா விமர்சித்துள்ளார்.
சிவகங்கையில் நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பிறகு பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில், கார்த்தி சிதம்பரத்தின் 22 கோடி சொத்தை அமலாக்கத்துறை முடக்கிஉள்ளதும், இதற்கு முன்னர் ஒரு 54 கோடி முடக்கப்பட்டதும், பனிமலையின் சிறு நுனிதான் எனவும், இதில் ஆழமாக போக போக பல விஷயங்கள் வெளியில் வரும் என விமர்சித்தார். மேலும், திஹார் சிறையில் இருந்தவர்கள் இருவர் திமுகவில் இருப்பதால், சிறைக்கு சென்று வந்தால்தான் தகுதி என்று பேச வேண்டிய நிர்பந்தம் ஸ்டாலினுக்கு இருக்கிறது என ஸ்டாலினை கடுமையாக சாடினார்.