கர்நாடகா சிவகுமார சுவாமிகளின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

கர்நாடக மாநிலத்தின் சித்த கங்கா மடாதிபதி சிவகுமார சுவாமிகளின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. கர்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சித்தகங்கா மடத்தின் ஜீயர் சிவகுமார சுவாமிகள் நேற்று காலமானார். இதனையடுத்து அவரது உடல் சித்தகங்கா மடத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, முன்னாள் முதலமைச்சர் சதானந்தா கவுடா, மாநில பாஜக தலைவர் எடியூரப்பா என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் சித்தகங்கா மடத்தில் ஸ்ரீ சிவகுமார சுவாமிகளின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version