மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கக்கூடாது: எம்.பி. நவநீத கிருஷ்ணன்

மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக்கூடாது என்று அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் நவநீத கிருஷ்ணன் மாநிலங்களையில் வலியுறுத்தினார்.

மாநிலங்களவையில் பேசிய நவநீத கிருஷ்ணன், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேகேதாட்டுவில் அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். இதுதொடர்பாக கர்நாடக அரசு தரப்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தமிழக தரப்பில் இதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு கர்நாடகம் விண்ணப்பித்துள்ளதாக நவநீத கிருஷ்ணன் தெரிவித்தார். தமிழகத்தின் அனுமதியில்லாமல் மேகேதாட்டுவில் அணை கட்டக்கூடாது என்றும், இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் என்றும் கர்நாடகவுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

Exit mobile version