கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்தவேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது
கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அக்கட்சிகளை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பெங்களூருவில் தங்க வைக்கப்பட்டுள்ள பாஜக எம்.எல்.ஏ.க்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா, கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்துள்ளதால் முதல்வர் குமாரசாமி உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். எம்.எல்.ஏ.க்களின் நம்பிக்கையை இழந்துள்ள குமாரசாமி இனியும் பதவியில் தொடர்வது முறையல்ல என்று விமர்சித்துள்ள எடியூரப்பா, நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.