கர்நாடக சட்ட மேலவை துணைத் தலைவர் தர்மே கவுடா மரணம்

கர்நாடக சட்ட மேலவை துணைத் தலைவர் தர்மே கவுடா, சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கர்நாடகாவின் சிக்மகளூரு அருகே கடூரில் ரயில் தண்டவாளம் அருகே தர்மே கவுடாவின் உடலை காவல்துறையினர் கைப்பற்றி உள்ளனர். ரயில் முன் பாய்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், தற்கொலைக்கான காரணம் குறித்து தர்மே கவுடா கடிதம் எழுதியிருப்பதாகக் கூறப்படும் கடிதமும் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளன. அவரது மறைவுக்கு மதசார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா இரங்கல் தெரிவித்துள்ளார்.

1955ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி சிக்மகளூருவில் பிறந்தவர் தர்மே கவுடா. மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த 64 வயதான அவர், கர்நாடக சட்ட மேலவை துணைத் தலைவர் பதவி வகித்து வந்தார். கடந்த 15ஆம் தேதி பசுவதை தடைச் சட்டம் தொடர்பான விவாதத்தில், அவை முடிவுகளை மேற்கொள்ள தர்மே கவுடாவை காங்கிரஸ் உறுப்பினர்கள் இழுத்து, வெளியேற்ற முயற்சித்தனர். பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதா தள உறுப்பினர்கள் அவரை இருக்கையில் அமரவைக்க முற்பட்டனர். இதனால், இரண்டு தரப்பினரிடையே தள்ளுமுள்ளும், கைகலப்பும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version