கர்நாடக சட்டப்பேரவையில் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது.
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ.,க்கள் 15 பேர் சமீபத்தில் ராஜினமா செய்தனர். ஆனால், அவர்களது ராஜினாமா குறித்து கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் முடிவு எடுக்காமல் உள்ளார். இதையடுத்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் மும்பையில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர். இந்நிலையில், குமாரசாமி அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பது குறித்து சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு, அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 15 பேரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பதை தவிர்த்தாலோ அல்லது கட்சிக்கு எதிராக வாக்களித்தாலோ கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது