கர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 2 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் திரும்பப் பெற்றதால் பரபரப்பு

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 2 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் திரும்பப் பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

224 சட்டப்பேரவை உறுப்பினர்களை கொண்ட கர்நாடகாவில், ஆட்சி அமைக்க 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. குமாரசாமி தலைமையிலான அரசுக்கு 119 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருந்தது. இந்நிலையில் சுயேட்சை எம்.எல்.ஏ நாகேஷ் மற்றும் கே.பி.ஜே.பி கட்சியின் சங்கர் ஆகியோர் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர். இருப்பினும் 117 எம்.எல்.ஏக்கள் அரசை ஆதரிப்பதாக ஆளும் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. அதே நேரம் 5 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மாயமாகியுள்ளதாக கூறப்படுவதால், குமாரசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனிடையே பா.ஜ.க. தங்கள் கட்சி எம்.எல்.ஏக்களை குதிரை பேரத்தில் இருந்து தடுக்க, குருகிராமில் 99 எம்.எல்.ஏக்களை ரிசார்ட் ஒன்றில் தங்க வைத்துள்ளது. இதனால் கர்நாடக அரசியலில் உச்ச கட்ட பரபரப்பு நிலவுகிறது.

 

 

Exit mobile version