தென்பெண்ணை ஆறு விவகாரத்தில் கர்நாடக அரசு முழு உரிமை கோர முடியாது…

தென்பெண்ணை ஆறு விவகாரத்தில் கர்நாடக அரசு முழு உரிமை கோர முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா தடுப்பணை கட்ட தடைவிதிக்கக் கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசின் வழக்கறிஞர்கள், தென்பெண்ணையாறு தமிழகத்திலும் ஓடுவதால் கர்நாடக அரசு முழு உரிமை கோர முடியாது என்று தெரிவித்தனர்.

தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் கட்டுமான பணிகள் மற்றும் ஆய்வுகள் உள்ளிட்ட எந்த ஒரு நடவடிக்கையையும் கர்நாடக அரசு மேற்கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தினர். தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகா தடுப்பணை கட்ட முயற்சிப்பதில் உள்நோக்கம் உள்ளதாகவும் தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது.

Exit mobile version