கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைந்துள்ளால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீர்வரத்து 28 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.
கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய பகுதிகளில் பருவமழை குறைந்ததால் கேஆர்எஸ், கபினி அணைகளுக்கு வரக்கூடிய உபரி நீர் வரத்து குறைந்து
வருகிறது.
கேஆர்எஸ் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளவை எட்டியுள்ள நிலையில் அணையில் இருந்து 14 ஆயிரத்து 225 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. கபினி அணையின் நீர்மட்டம் முழு கொள்ளவை எட்டிய நிலையில் அணையில் இருந்து 7 ஆயிரத்து 500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இந்த இரு அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 21 ஆயிரத்து 725 கன அடியாக குறைந்துள்ளது. இதனால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு வரும் நீர்வரத்து 36 ஆயிரம் கனஅடியிலிருந்து 28 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.
பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பபால் தொடர்ந்து 37வது நாளாக அருவியில் குளிக்கவும், 9வது நாளாக பரிசல் இயக்கவும் தடை நீடிக்கப்பட்டுள்ளது.