பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவையில் குமாரசாமி அரசு உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென ஆளுநர் இருமுறை கெடு விதித்த போதிலும். அதை ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு புறக்கணித்து விட்டது. இதனால் அம்மாநிலத்தில் குழப்பமான சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில், இன்று கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. பேரவையில் திங்கட் கிழமை வாக்கெடுப்பு நடைபெறுவதாக கூறப்படும் நிலையில் கூட்டம் நடைபெற உள்ளது.