கர்நாடகா மாநில அமைச்சரவை ஜூன் 12ஆம் தேதி விரிவாக்கம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், இந்த கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. அதுமட்டுமின்றி பதவி கிடைக்காத காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சிலர் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.
இதனிடையே, எஞ்சியிருக்கும் எம்.எல்.ஏக்களை பாதுகாக்கும் வகையில், அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய முதலமைச்சர் குமாரசாமி முடிவு செய்தார். இருப்பினும், தொடர்ந்து இழுபறி நிலவிவந்த நிலையில், வரும் ஜூன் 12ஆம் தேதி, கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
அப்போது, ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ, இரு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.