“காப்பான்” எப்படி இருக்கும்? – சூர்யா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட்

லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் கே.வி.ஆனந்துடன் நடிகர் சூர்யா இணைந்துள்ள படம் “காப்பான்”. இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோர் நடித்துள்ளனர். செப்டம்பர் 20ம் தேதி உலகம் முழுவதும் காப்பான் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் காப்பான் படத்தின் ட்ரெய்லர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம், என்ஜிகே படங்கள் வெற்றியடையாததால் அவரது ரசிகர்கள் காப்பான் படத்தை மிகவும் எதிர்நோக்கியுள்ளனர்.

Exit mobile version