"காப்பான்" படக்குழு வெளியிட்ட அப்டேட்: மகிழ்ச்சியில் சூர்யா ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனான நடிகர் சூர்யா அயன், மாற்றான் படங்களை தொடர்ந்து இயக்குநர் கே.வி.ஆனந்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் “காப்பான்”. இந்த படத்தில் அவருடன் நடிகர் மோகன்லால்,ஆர்யா, நடிகை சாயிஷா போன்றோர் நடித்துள்ளனர். இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த மே மாதம் காப்பான் படத்தின் டீசர் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த மாதத்தில் நடிகர் சூர்யா பிறந்தநாள் வருவதால் அதற்கு ஏற்றாற்போல் படக்குழு புதிய அப்டேட் ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. அதில் காப்பான் படத்தின் ‘சிரிக்கி’ என்ற முதல் சிங்கிள் பாடல் ஜுலை 5-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் மோகன்லால் நாட்டின் மிகப்பெரிய பதவி வகிப்பவராகவும், நடிகர் சூர்யா அவரின் பாதுகாப்பு அதிகாரியாகவும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது…

Exit mobile version