குமரியின் குற்றாலமான திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்

கன்னியாகுமரி மாவட்டத்தில், தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக, குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், ஆரல்வாய்மொழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த தொடர் மழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

இதில், மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால், குமரியின் குற்றாலம் எனப்படும் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருவதால், சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று இரவு சுமார் 2 மணி நேரம் பெய்த கனமழையால், மாவட்டத்தின் பல இடங்களில், சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்தது.

மழையால், அணைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனால் விவசாய தேவைகளும் நிறைவேறும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version