கன்னியாகுமரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

கேரளா மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை கன்னியாகுமரி மாவட்டத்திலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கேரளா சமஸ்தானத்தை ஆட்சி செய்த மாமன்னர் மகாபலி சக்கரவர்த்தி ஒவ்வொரு ஆண்டும் தனது மக்களை காண வருவதாக ஐதீகம். அந்த நாளை கேரள மக்கள் ஓணம் திருநாளாக கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் ஓணம் விழாவில் 9 ஆவது நாள் வரும் திருவோணம் பிரசித்தி பெற்றது, அதன் படி இன்று கேரளாவில் திருவோண விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு நாகர்கோவிலில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஓணம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கேரளா பாரம்பரிய உடை அணிந்தும், அத்தப்பூ கோலமிட்டும் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனர். கோயில் வளாகத்தில் பூக்களால் போடப்பட்ட பெரிய அளவிலான அத்தப்பூ கோலம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Exit mobile version