கன்னியாகுமரியில் கனமழையால் அதிகம் பாதித்த தொகுதிகளை முதலமைச்சர் கண்டுகொள்ளவில்லை

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிட வந்த முதலமைச்சர் ஸ்டாலின், கடுமையாக பாதிக்கப்பட்ட விளவங்கோடு, கிள்ளியூர், குளச்சல், பத்மநாபபுரம் தொகுதிகளை பார்வையிடவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கனமழையால், கன்னியாகுமரி மாவட்டம் தனித்தீவாக காட்சியளிக்கிறது. ஏராளமான குடியிருப்புகளில், வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் பரிதவித்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் கன்னியாகுமரி சென்றார்.

நாகர்கோவிலில், தோவாளை, குமாரகோவில் என ஒரு சில பகுதிகளை மட்டும் பார்வையிட்ட அவர், மற்ற பகுதிகளை பார்வையிடாமல் சென்றார். கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்ட விளவங்கோடு, கிள்ளியூர், குளச்சல், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குமரி மேற்கு மாவட்ட பகுதிகளை முதலமைச்சர் புறக்கணித்து விட்டு சென்றதாக கன்னியாகுமரி மாவட்ட மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

Exit mobile version