கன்னியாகுமரியில் பூக்களின் வரத்து குறைந்து, தேவை அதிகரித்ததால் மலர்ச் சந்தைகளில் விலை 5 மடங்கு உயர்ந்து காணப்படுகிறது…
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் உள்ள மலர் சந்தை பிரசித்தி பெற்றதாகும். இந்த நிலையில், கனமழை காரணமாகவும், பனிப்பொழிவு காரணமாகவும் சந்தைக்கு வரும் பூக்களின் வரத்து குறைந்துள்ளது.
ஆனால், கார்த்திகை மாதம் தற்போது பிறந்துள்ளதால் கோயில்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு மலர்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால், தோவாளை மலர் சந்தையில் பூக்களின்விலை ஐந்து மடங்காக உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் வரை கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த மல்லிகைப்,பூ தற்போது ஆயிரம் ரூபாய்க்கும், கிலோ 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பிச்சிப்பூ, 850 ரூபாய்க்கும், ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தாமரை 12 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
அரளி, செவ்வந்தி, ரோஜா என்பது உள்ள அனைத்து வகையான பூக்களின் விலையும் உயர்ந்து காணப்படுகிறது.