கன்னியாகுமரியில், மழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக, வீடுகள் மற்றும் சாலைகள் சேதமடைந்துள்ளது. மேலும், விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து விளை நிலங்கள் பாதிப்பிற்குள்ளானது.
இந்த நிலையில், 3 பேர் கொண்ட மத்திய ஆய்வுக் குழுவினர் மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, வெள்ளப்பெருக்கால் அதிகம் பாதிக்கப்பட்ட வடக்கு தாமரைக்குளம், வைக்கல்லூர், தேரேகால்புதூர் உள்ளிட்ட பகுதிகளில், சேதமடைந்துள்ள பாலங்கள் மற்றும் கால்வாய்களை பார்வையிட்டனர்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.