கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்து உள்ளது இராணித்தோட்டம். இராணித்தோட்டம் பகுதியைச் சேர்ந்த அரசு போக்குவரத்துக் கழக திமுக தொழிற்சங்க நிர்வாகிகள் தொடர்ந்து அதிமுகவினரை தங்களின் கட்சியில் சேருமாறு மிரட்டி வந்துள்ளார்கள். இதனைக் கண்டிக்கும் விதமாக அரசுப் போக்குவரத்து பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்கத்தினர் திமுக நிர்வாகிகளை கண்டித்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
.இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் மற்றும் முன்னாள் அமைச்சர். கே. டி.பச்சைமால், மாவட்ட அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், ’அதிமுக தொழிற்சங்க ஊழியர்களுக்கு விடுப்பு வழங்காமல், திமுக தொழிற்சங்க நிர்வாகிகள் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் இதற்கு அதிகாரிகளும் துணை போவது வேதனையான விஷயமாக உள்ளது என்றும்’ அவர் தெரிவித்தார். மேலும், கொரோனா காலங்களில் நிறுத்தப்பட்ட பேருந்துகள், 2 ஆண்டுகள் ஆன பிறகும்கூட இதுவரை கிராம பகுதிகளுக்கு இயக்கப்படவில்லை என முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.
பேருந்து போக்குவரத்தினை அதிக அளவிற்கு சாமானிய மக்களே பயன்படுத்துகிறார்கள். முக்கியமாக கிராமப் பகுதியைச் சேர்ந்த மக்கள் பேருந்து போக்குவரத்தினால் மிகுந்த நன்மையைப் பெறுகிறார்கள். இராணித்தோட்டம் போன்ற சிறிய கிராமங்களுக்கு பேருந்து சேவையினை முடக்கி வைத்திருப்பது விடியா திமுக அரசின் மெத்தனம் ஆகும். இத்தகைய அலட்சியப்போக்கு மிகவும் கண்டிக்கத் தக்கது.