கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே, இளைஞரை கத்தியால் குத்திவிட்டு 30 லட்சம் ரூபாய் பறித்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியை சேர்ந்த தமிழரசன், சிவராஜ் ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் கோவை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இவர்களது வாகனத்துக்கு முன்பு மற்றோரு இருசக்கர வாகனத்தில், கோவையை சேர்ந்த தர்ஷன், ராகுல் குமார் ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். கணியூர் சுங்கச்சாவடி அடுத்துள்ள மேம்பாலம் அருகே இரண்டு வாகனங்களும் மோதிக் கொண்டதில், 4 பேரும் கீழே விழுந்து காயமடைந்தனர்.
அப்போது, அவர்களை பின்தொடர்ந்து 4 இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் ராகுல்குமாரின் முதுகில் கத்தியால் குத்திவிட்டு அவரிடம் இருந்த 30 லட்சம் ரூபாயை பறித்துச் சென்றனர். விபத்தில் காயமடைந்த நான்கு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.