மீனவர்களின் கோரிக்கையை ஏற்று அதிமுக ஆட்சியில், தூத்துக்குடி மாநகர தந்தை என்று அழைக்கப்படும் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்துக்கு அரசு சார்பில் பிறந்த நாள் விழாவாகவும், மணிமண்டபமும் கட்ட அரசாணை வெளியிடப்பட்டது. பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் இந்த திட்டத்தை விடியா திமுக அரசு மேற்கொண்டது. அதன்படி மணிமண்டபம் கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் திமுக கனிமொழி எம்.பி மற்றும் அமைச்சர்கள் கலந்துக்கொண்டனர். அப்போது விழா மேடையில் அலங்கரித்து வைக்கபட்டிருந்த ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்த் திருவுருவப்படத்திற்கு மாலை கூட அணிவிக்காமல் அடிக்கல்லை மட்டும் நாட்டி சென்றனர். மணிமண்டப கட்டுமான பணிகளை முந்தைய அதிமுக அரசு செய்து முடித்திருந்தால் திறமையற்ற திமுக அரசு, வழக்கம் போல் இதற்கும் ஸ்டிக்கரை ஒட்டிவிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு சென்றிருப்பார்களோ என்னவோ தெரியவில்லை என மீனவர்கள் விமர்சித்துள்ளனர்.
Discussion about this post