காங்கேயம் தொகுதி திமுக ஒன்றிய பொறுப்பாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் அப்புக்குட்டி என்பவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் சாமிநாதனின் ஆதரவாளரான இவர், தேங்காய் களம், தேங்காய் எண்ணெய் ஆலை மற்றும் பேப்பர் மில் ஆகிய தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், மிதிப்பாறை பகுதியில் உள்ள அவரது வீடு, காங்கேயத்தில் உள்ள அலுவலகம் மற்றும் அவருடைய தொழில் நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது.