காஞ்சிபுரம் பழ வியாபாரிக்கு அரிவாள் வெட்டு

காஞ்சிபுரம் காந்திரோடு பகுதியில் ஏராளமான பட்டுசேலைகள் விற்பனை நடைபெறும் இடம் மேலும் அங்கே மொத்த விற்பனை சங்கங்களும், சில்லறை விற்பனை கடைகளும் ,உற்பத்தி செய்யும் இடமாகவும் விளங்கி வருகிறது . பட்டு சேலை வாங்குவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகளும் வெளிமாநில மக்களும் வந்து செல்லக்கூடிய மிக முக்கியமான பகுதியான காந்தி ரோட்டில் நேற்று முன் தினம் இரவு பழ வியாபாரம் செய்யும் ராஜா என்பவரை இரண்டு இளைஞர்கள் பைக்கில் வந்து பட்டாக்கத்தி எடுத்து தாறுமாறாக வெட்டினர் .

படுகாயமடைந்த பழ வியாபாரி ராஜா காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். எந்தவித முன் பகையும் இல்லாமல் வெட்டியவர் யாரென்று கணிக்க முடியாத அளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை மிக தீவிரமாக தேடி வருகின்றனர்.அப்பகுதி மக்களிடையே மிகுந்த .காந்தி ரோட்டில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தேறியுள்ளது அப்பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தை உண்டாக்கி உள்ளது.

Exit mobile version