காஞ்சிபுரம் பழைய உற்சவர் சிலைக்கு ஜரிபந்தனம் செய்யும் பணி தொடங்கியது

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள பழைய உற்சவர் சிலைக்கு நீதிமன்ற உத்தரவின்படி ஜரிபந்தனம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் புதிதாக செய்யப்பட்ட சோமாஸ்கந்தர் சிலையில் தங்கம் மோசடி வழக்கு உள்ளது. இதன் காரணமாக சிலை தடுப்பு பிரிவினர், சிலையை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இதனால், ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உற்சவம் இந்த ஆண்டு நடைபெறுவது கேள்விக்குறியானது.

இந்நிலையில், பக்தர்கள் சார்பில் உற்சவம் நடத்த வேண்டும் என வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, பழைய சிலைக்கு ஜரிபந்தனம் செய்து உற்சவம் நடத்த வேண்டும் என இரு தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டார். இந்நிலையில், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில், பழைய சோமாஸ்கந்தர் சிலைக்கு ஜரிபந்தனம் செய்யும் பணி நடைபெற்றது. இதையடுத்து, பங்குனி உற்சவத்தில் சுவாமி அருள்பாலிக்க உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Exit mobile version