காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 48 நாள் வழிபாட்டுக்குப் பிறகு அனந்தசரஸ் குளத்தில் பாதாள அறையில் அத்திவரதர் சிலை வைக்கப்பட்ட போது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
40 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கிய அத்திவரதர் தரிசனம் கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது. இதையடுத்துச் சிறப்புப் பூஜைகளுக்குப் பின்னர், அத்திவரதர் சிலை அனந்தசரஸ் குளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள பாதாள அறையில் வைக்கப்பட்டது. அத்தி மரத்தில் செய்யப்பட்ட சிலை என்பதால், தண்ணீரில் மிதக்காமல் இருக்கச் சிலையைச் சுற்றிலும் நாகதேவதை கற்சிலைகளால் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த காட்சி தற்போது வெளியாகி உள்ளது. 40 ஆண்டுகளுக்கு பிறகு 2 ஆயிரத்து 59ம் ஆண்டு மீண்டும் குளத்தில் இருந்து வெளிவந்து, அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.