காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் அறக்கட்டளை சார்பில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூரில், தனியார் தொழிற்சாலையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில், தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாதல் நிலையில், தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று கூடி சமத்துவ பொங்கலை கொண்டாடினர். பாரம்பரிய உடையணிந்து பொங்கல் வைத்து, கோலாட்டம், சிலம்பாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட ஆடல் பாடல்களுடன் சமத்துவ பொங்கலை உற்சாகத்துடன் கொண்டாடினர்.
இதேபோல், நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் மண்பானையில் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கலை கொண்டாடினர். காற்று மாசு மற்றும் பிளாஸ்டிக் எதிர்ப்பு விழிப்புணர்வு குறித்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் கலைக்குழுவினருடன் இணைந்து உற்சாக நடனமாடினர்.