காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அத்திவரதர் உற்சவத்தின் 26ம் நாளான இன்று அத்திவரதர் இளஞ்சிவப்பு பட்டாடையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 26ம் நாளான இன்று முத்து பாதாம், ஏலக்காய், வெட்டிவேர் மற்றும் பஞ்சவர்ண மாலைகளால் அத்திவரதர் அலங்கரிக்கப்பட்டு, முத்து கிரீடம் கொண்டு இளஞ்சிவப்பு பட்டாடையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இன்று, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா ஆகியோர் குடும்பத்துடன் அத்திவரதரை தரிசனம் செய்தனர். நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு ஏற்பாடுகள் அரசு சார்பில் செய்யப்பட்டு வருகின்றது. இன்று ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்பதால் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.