30ஆம் நாளான இன்று அத்தி வரதர் நீல நிற பட்டாடையில் காட்சி

காஞ்சி அத்தி வரதர் நீல நிற பட்டாடையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, 40 நாட்கள் நடைபெறும் அத்திவரதர் வைபவம், ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதுவரை 44 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர். 30ஆம் நாளான இன்று, அத்தி வரதர் நீல நிற பட்டாடையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

காலை 5மணி முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை அதிகரித்துள்ளது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, அத்தி வரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.

Exit mobile version