கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் பாகற்காய் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கம்பம் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் பாகற்காய் விவசாயம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த பயிர் நடவு செய்து 45 நாட்களில் பலன் தரும் என்பதாலும் தொடர்ந்து மூன்று மாதங்கள் வரை காய்கள் பலன் தரும் என்பதாலும் அதிக அளவில் விவசாயிகள் பாகற்காய் விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் இப்பகுதியில் விளையும் பாகற்காய்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதாக விவசாயிகள் தெரிவித்து உள்ளனர். ஒரு கிலோ 25 ரூபாய்க்கு விற்பனையாகின்றன என்றும் கடந்த ஆண்டை விட அதிக லாபம் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இயற்கை உரங்களை மானிய விலையில் கொடுத்து உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.