22 சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும்-அமைச்சர் காமராஜ்

ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் மோகன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து மாப்பிள்ளையூரணியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், 4 சட்டமன்ற தொகுதிகள் மட்டுமில்லாமல், நடந்து முடிந்த 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுக அமோக வெற்றி பெறும் என்று கூறினார். கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Exit mobile version