திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேரில் பார்வையிட்டார்.
திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர் காமராஜ் நேரில் சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக இன்று திருவாரூர் ஒன்றியப் பகுதிகளான புலிவலம், கூடூர், மாங்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிவாரண முகாம்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கஜா புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய 100 நாள் வேலை திட்டத்தினை துவங்க உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும், திருவாரூர் மாவட்டத்தில் முறிந்து விழுந்த மின் கம்பங்களை சரி செய்யும் பணியில் சுமார் 2 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டிருப்பதாக கூறினார்.