20 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெரும் என, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பரவமழை தொடங்கியுள்ள நிலையில், திருவாரூரில் உள்ள நியாய விலை கடைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைச்சர் காமராஜ் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் இடைத்தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்கும் என குறிப்பிட்டார். தமிழகத்தில் பொதுவிநியோகத் திட்டம் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். பொதுமக்கள் இடையூறின்றி பொருட்களைப் பெற்று செல்வதற்காக நியாயவிலை கடைகள் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் செயல்பட உள்ளதாவும் அவர் தெரிவித்தார்.