வட மாநிலத்தவர்களால் மத்தியப் பிரதேச தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பாதிப்பு – கமல்நாத் 

வட இந்தியர்களால் மத்தியப் பிரதேச மக்களின் வேலைவாய்ப்பு பறிபோவதாக அந்த மாநில முதலமைச்சர் கமல்நாத் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் நேற்று பதவியேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பீகார், உத்தரப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் இருந்து அதிகளவு தொழிலாளர்கள் வேலை தேடி மத்தியப் பிரதேசத்திற்கு வருவதால் உள்ளூர் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படுவதாக தெரிவித்திருந்தார்.

அவரது இந்த கருத்துக்கு மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கமல்நாத்தின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து தலைநகர் பாட்னாவில் லோக் ஜனசக்த் கட்சியினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

Exit mobile version