தேவையில்லாமல் பேசி வாங்கிக் கட்டிக்கொள்வது என்று சொல்வதுபோல், தேவையில்லாமல் பேசிவிட்டு, தற்போது வழக்குக்கு பயந்து, நீதிமன்றத்தை நாடியுள்ளார் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன்.
சமீபத்தில், தேர்தல் பிரசாரத்தின் போது, இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனப் பேசி, வம்பில் மாட்டிக்கொண்டார் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன். இஸ்லாமிய மக்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால், அவர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக கமல் இவ்வாறு பேசியுள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதோடு நிற்காமல், டெல்லி, சென்னை, மதுரை, கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவருக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் நடுநடுங்கிப்போன கமல்ஹாசன், அவ்வழக்குகளை தள்ளுபடி செய்யுமாறு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையை நாடியுள்ளார்.
பொதுவாழ்க்கைக்கு வருகிறவர்கள் வழக்குகளை கண்டு அஞ்சாமல் அவற்றை எதிர்கொள்வதே அரசியல் என்பதாகும். ஆனால், கட்சி ஆரம்பித்து ஒரு வருடமே ஆகியுள்ள நிலையில் முதல் வழக்குக்கே வெலவெலத்து போய் உதவி கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார் கமல்ஹாசன். நிழல் உலகத்தில் மட்டுமே வாழ்ந்து வந்த கமல்ஹாசன், நிஜ உலகின் நெருக்கடிகளை எதிர்கொள்ள தயங்குவது வெளிப்பட்டுவிட்ட காரணத்தால் அவர் அரசியல் களத்தில் தாக்குப்பிடிப்பாரா என்ற கேள்வியை எழுந்துள்ளது.