மக்கள் நீதி மய்யம் கட்சியின் கடலூர் மண்டல பொறுப்பாளர் பதவியிலிருந்து குமரவேல் விலகியுள்ளார். கட்சியிலிருந்து தான் விலகியது குறித்து குமரவேல் செய்தியாளர்களிடம் இன்று விளக்கம் அளித்தார். மக்களவை தேர்தல் வாக்காளர் பட்டியலை வெளியிட கட்சி தாமதம் செய்வதாக கூறிய அவர், வேட்பாளரை தேர்வு செய்யும் குழுவில் கோவை சரளா இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார்.
மேலும் கமல் சுற்றியுள்ள நிர்வாகிகள் அவருக்கு கள நிலவரத்தை தெரிவிப்பதே இல்லை என்று குற்றம்சாட்டிய அவர், கோவை சரளாவை கட்சியின் செயற்குழு உறுப்பினராக்கியது ஏற்க் முடியாது என்று கூறினார். தொடர்ந்து பேசிய கமல் ஒரு முழு நேர அரசியல்வாதி அல்ல என்றும், அரசியல்வாதி தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்றும் அவர் கூறினார். கட்சியிலிருந்து நான் தான் விலகினேன் தவிர, கட்சி என்னை நீக்கவில்லை என்று அவர் விளக்கம் அளித்தார்.
வேட்பாளர் நேர்காணலில் நான் பங்கேற்கவில்லை என்று கூறுவது முற்றிலும் தவறு என்று கூறிய அவர், மக்களவை தேர்தல் வேட்பாளரை அறிவிப்பதில் தொடர்ந்து தாமதம் செய்வது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.