புயல் பாதித்த தஞ்சை பகுதிகளில் கமல் ஹாசன் பார்வையிட்டார்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

கஜா புயல் பாதித்த மக்களுக்கு பல்வேறு தரப்பினர் நிவாரண உதவி அளித்து வருகின்றனர். தமிழக அரசு சார்பில், முகாம்கள் அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பார்வையிட்டார். அப்போது, விவசாயிகளுக்கு ஆறுதல் கூறிய அவர், நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.

Exit mobile version