கலியுக வரதராஜபெருமாள் கோவிலில் தேரோட்டம்

அரியலூர் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் கலியுக வரதராஜப்பெருமாள் கோயிலில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய வரதராஜபெருமாள் கோவிலின் திருவிழாவில் 9 ஆம் நாள் தேரோட்டம் நிகழ்வு நடைபெற்றது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாளுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர் தேருக்கு வரதராஜப்பெருமாள் எழுந்தருளினார். ஏராளமானோர் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் புடைசூழ கிளம்பிய தேர் வானவேடிக்கைகளுடன் நான்குவீதிகளிலும் சுற்றிவந்து கோவிலை வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Exit mobile version