3 திருமணம் செய்து 4வது திருமணத்திற்கு தயரான கல்யாண கயவன்

3 திருமணம் செய்துவிட்டு 4வது திருமணத்திற்கு தயார் ஆன கல்யாண கயவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வருபவர் கேரளாவை சேர்ந்த திருமண நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அஜித் குமார். இவர் கடந்த 1998ஆம் ஆண்டு ஜோதி என்பவரை திருமணம் செய்து இரண்டு பிள்ளைகள் பிறந்ததும் 5 வருடத்தில் அவரை கைவிட்டுள்ளார். பின்னர் தனது பெயரை அஜீத் ஸ்ரீகாந்த் என மாற்றி 2002ஆம் ஆண்டு வேறு திருமணம் செய்து, ஒரு மகனையும் பெற்றுள்ளார். பின்னர் 2012ஆம் ஆண்டு தேவிகா என்ற பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் தேவிகாவிடம் நான்காவதாக ஒரு திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், அதனால் நீ விலகிவிடு என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து தேவிகா அளித்த புகாரின் பேரில் போலீசார் அஜித்குமாரை கைது விசாரித்ததில் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அவரை சிறையிலடைத்தனர்.

Exit mobile version