கல்வராயன்மலை கோடை விழா நிறைவு நாள் நிகழ்ச்சி

விழுப்புரத்தில் கல்வராயன்மலை கோடை விழா நிறைவு நாள் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் கல்வராயன்மலை கோடை விழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கோடை விழாவில், 30 துறைகளின் மூலம் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் கண்காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் மிகச்சிறப்பாக அமைக்கப்பட்ட 3 அரங்குகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முதல் பரிசு தோட்டக்கலைத்துறைக்கும், இரண்டாம் பரிசு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகள் துறைக்கும், மூன்றாம் பரிசு வேளாண்மைத்துறைக்கும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்கள் மற்றும் கலை பண்பாட்டுத்துறைகள் மூலம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Exit mobile version